நாகை வட்டத்தில் 12-ந்தேதி பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை
நாகூர் நாகநாதர் கோவில் தேரோட்டம் நாகை வட்டத்தில் 12-ந்தேதி பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை கலெக்டர் அருண்தம்புராஜ் தகவல்
நாகப்பட்டினம்
வெளிப்பாளையம்:
நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டம், நாகூர் நாகநாதர்கோவிலில் ஆனிமாத பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ்தேரோட்டம் வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் 12-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story