12 பயனாளிகளுக்கு மானியத்தொகைக்கான ஆணை
12 பயனாளிகளுக்கு மானியத்தொகைக்கான ஆணை
இணை மானிய திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு மானியத்தொகைக்கான ஆணையை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.
மானியத்தொகைக்கான ஆணை
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் இணை மானிய திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு மானியத்தொகைக்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அரிசி கடை அமைத்தல், இட்லி பொடி தயாரித்தல், வாடகைக்கு அலங்கார பொருட்கள் வழங்குதல், இ-சேவை மையம், தையல் கடை, சணல் பைகள் தயாரித்தல் உள்ளிட்ட தொழில் சார்ந்த பணிகளை அடிப்படையாக கொண்டு தொழில் தொடங்கி உள்ள 12 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 13 ஆயிரத்து 410 மானியத்தொகைக்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட செயல் அலுவலர் செல்வம், முன்னோடி வங்கி மேலாளர் செந்தில் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வடிகால் மதகு கட்டும் பணி
நாகப்பட்டினத்திலிருந்து தஞ்ைச வரையிலான தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி ரூ.98 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணியில் சாலை இடையில் செல்லும் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால் மதகுகளும் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. சாலையில் மழை நீர் தேங்கும் இடங்களில் மழை நீர் வடிகால் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. நீடாமங்கலம் அண்ணாசிலை அருகில் ஒரத்தூர் கிராம வடிகால் மதகு கட்டும் பணி சாலையில் ஒருபகுதியில் முடிந்துள்ளது. மற்றொரு பகுதியில் வடிகால் மதகு கட்டும் பணி தொடங்க உள்ளது. அந்த வடிகால் மதகு கட்டும் இடத்தை நேற்று கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போக்குவரத்திற்கு இடையூறு இன்றி வடிகால் மதகு கட்டு பணியை விரைவில் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கலெக்டர் ஆய்வு
திருத்துறைப்பூண்டியில் ரூ.20.40 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைெபற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது இந்த மாத இறுதிக்குள் புறவழிச்சாலை பணிகள் முழுமையாக முடியும் என்றும், சாலைகள் அமைக்கும் இடங்களில் உள்ள குடிநீர் பைப்புகள், மின்கம்பங்கள், இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என கூறினார். தொடர்ந்து சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை கலெக்டர் நட்டார். ஆய்வின் போது திருத்துறைப்பூண்டி தாசில்தார் காரல்மார்க்ஸ், திருவாரூர் கோட்ட பொறியாளர் இளம்வழுதி, உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து, இளங்கலை பொறியாளர் ரவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.