12 மணி நேர வேலை மசோதா - யாரும் எதிர்பாராத முடிவை முதல் அமைச்சர் எடுப்பார் - அமைச்சர் சேகர் பாபு பேட்டி
இது தொடர்பாக யாரும் எதிர்பாராத முடிவை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுப்பார் எனவும் உறுதி அளித்தார்.
சென்னை,
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு , கூறியதாவது ,
12 மணி நேர வேலை மசோதா குறித்து முதல் அமைச்சரின் வழிகாட்டுதலின்படி நாளைய தினம் பொதுப்பணித்துறை அமைச்சர் , அமைச்சர் அன்பரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் சுமுகமான முடிவுகள் எடுக்கப்படும். இது தொடர்பாக யாரும் எதிர்பாராத முடிவை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுப்பார் எனவும் உறுதி அளித்தார்.
"பிரச்சனையை முடித்து வைப்பார் முதல்வர்" - அமைச்சர் சேகர் பாபு#Sekarbabu | #CMStalinhttps://t.co/Ikapami3EC
— Thanthi TV (@ThanthiTV) April 23, 2023