சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது
மதுக்கூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
மதுக்கூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
சூதாடிய 12 பேர் கைது
மதுக்கூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மதுக்கூர் ஒன்றியத்துக்குட்பட்ட அத்திவெட்டி மறவாக்காடு பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்ேபாது பணம் வைத்து சூதாடிய அத்திவெட்டி தெற்குதெருவை சேர்ந்த வைரமூர்த்தி (வயது 42), பட்டுக்கோட்டை கண்டியன்தெருவை சேர்ந்த முருகானந்தம் (47), மன்னார்குடி சோழபாண்டி நடுத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் (35), மன்னார்குடி பைபாஸ்ரோடு பகுதியை சேர்ந்த பிரபாகர் (27), வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (35), பாரதிராஜா (40), மன்னார்குடி அசேஷம் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் (38), மேலநத்தம் தெற்குதெருவை சேர்ந்த பிரபு ( 40), மன்னார்குடி ரகுநாதபுரம் பகுதியை சேர்ந்த மாறன் (38), பரக்கலக்கோட்டை அகமுடையார் தெருவை சேர்ந்த குமார் (43), வேதாரண்யம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (40), திருத்துறைப்பூண்டி கீழவாடியக்காடு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (35) ஆகியோரை மதுக்கூர் போலீசார் கைது செய்தனர்.
சீட்டுக்கட்டுகள் பறிமுதல்
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் மற்றும் சீட்டுக்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.