புகையிலை விற்ற 12 பேர் கைது
சிவகாசியில் புகையிலை விற்ற 12 பேரை கைது செய்தனர்.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி உட்கோட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்களிடம் இருந்து புகார்கள் வந்தன. அதனைத்தொடர்ந்து சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் உத்தரவின் பேரில் தனிக்குழு அமைக்கப்பட்டு புகையிலை விற்பனை தடுக்கப்பட்டு வருகிறது. மேலும் புகையிலை விற்பனையில் ஈடுபட்ட குருசாமி (வயது 55), சங்கரவேல் (57), செல்வம் (40), செல்வராஜ் (46), மாரியப்பன் (58), ஜெயராம் (51), பெருமாள்சாமி (45), தங்கபாண்டி (40), செல்வம் (46), திலகர் (40), காளிராஜ் (32), சங்கரமூர்த்தி (67) ஆகியோரை கைது செய்து அவர்கள் வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story