பணம் வைத்து சூதாடிய 12 பேர் சிக்கினர்
பணம் வைத்து சூதாடிய 12 பேர் சிக்கினர்
நெகமம்
நெகமம் அருகே ஏரிப்பட்டி சின்னு தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய பழனியை சேர்ந்த மணிகண்டன்(வயது 37), டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த ரமேஷ்குமார்(31), பொள்ளாச்சி அழகப்பா காலனியை சேர்ந்த சிந்தா(41), ஹக்கீம்(42), குமரன் நகரை சேர்ந்த ஜாபர் அலி(29), சமத்தூரை சேர்ந்த தர்மலிங்கம்(38), பொள்ளாச்சியை சேர்ந்த முருகேசன்(39), உடுமலையை சேர்ந்த யாசின்(29), பிரபாகரன்(39) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரத்து 210 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று அங்குள்ள கிணற்று மேட்டில் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்த வடுகபாளையத்தை சேர்ந்த வஞ்சிமுத்து(38), பொள்ளாச்சி மரப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன்(39), கோட்டூரை சேர்ந்த முபரக் அலி(36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 520 பறிமுதல் செய்யப்பட்டது.