தமிழகத்தின் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவு


தமிழகத்தின் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவு
x
தினத்தந்தி 30 July 2023 10:14 PM IST (Updated: 30 July 2023 10:35 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் 12 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.

அதே வேளையில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, இன்று 12 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

அதாவது, மதுரை நகரம், மதுரை விமான நிலையம், கடலூர், நாகை , திருச்சி , கரூர் பரமத்தி , அதிராமபட்டினம் , காரைக்கால், திருத்தணி, சென்னை, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியல் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Next Story