ஓடும் பஸ்சில் நிதிநிறுவன உரிமையாளர் மனைவியிடம் 12 பவுன் நகை அபேஸ்
மார்த்தாண்டத்தில் ஓடும் பஸ்சில் நிதி நிறுவன உரிமையாளர் மனைவியிடம் 12 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் ஓடும் பஸ்சில் நிதி நிறுவன உரிமையாளர் மனைவியிடம் 12 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
நிதிநிறுவன உரிமையாளர் மனைவி
மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை குழித்துண்டம் விளையை சேர்ந்தவர் ரசல்ராஜ். இவர் அந்த பகுதியில் சொந்தமாக நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அலெக்ஸ் சஜிதா பிரபல் (வயது 44). இவர் நேற்றுமுன்தினம் மதியம் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு நகைகளை அடகு வைக்க சென்றார்.
இதற்காக ஒரு பையில் 12 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அவர் உண்ணாமலைக்கடையில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் ஒரு அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.
12 பவுன் நகைகள் அபேஸ்
அந்த பஸ் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்புக்கு வந்தடைந்தது. இதையடுத்து அலெக்ஸ் சஜிதா பிரபல் பஸ்சில் இருந்து இறங்கி சிறிது தூரத்தில் உள்ள குறிப்பிட்ட வங்கிக்கு நடந்து சென்றார். வங்கிக்கு சென்றதும் அடகு வைப்பதற்காக கொண்டுவந்த 12 பவுன் நகையை எடுப்பதற்காக பையை திறந்து பார்த்தார்.
அப்போது, பையில் வைத்த நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்ட நொிசலை பயன்படுத்தி யாரோ மர்ம ஆசாமி பையில் வைத்திருந்த நகையை அபேஸ் செய்து தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து அலெக்ஸ் சஜிதா பிரபல் மர்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.