சாலை மறியல் செய்த 120 ஒப்பந்த ஊழியர்கள் கைது


சாலை மறியல் செய்த 120 ஒப்பந்த ஊழியர்கள் கைது
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மின்வாரியத்தில் பணிநிரந்தரம் செய்ய கோரி சாலை மறியல் செய்த ஒப்பந்த ஊழியர்கள் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

தமிழ்நாடு மின்வாரியத்தில் மின் உற்பத்தி, மின் விநியோகம், விரிவாக்க பணிகள் உள்ளிட்ட பணிகளில் அதிக அளவில் ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை டாடாபாத்தில் உள்ள தலைமை மின் வாரி யம் அலுவலக வாசல் முன்பு மறியல் போராட்டம் நடைபெற் றது. இதற்கு மாநிலச் செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

மறியல் போராட்டம் குறித்து ஒப்பந்த ஊழியர்கள் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வரும் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வாரிய அறி விப்பின் படி தினக்கூலியாக ரூ.350 வழங்க வேண்டும் என்றனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின் வாரிய ஊழியர்கள் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story