125 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்;முதியவர் கைது


125 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்;முதியவர் கைது
x

வத்திராயிருப்பு அருகே 125 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே 125 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரோந்து பணி

விருதுநகர் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, விழிப்புணர்வு பேரணி ஆகியவை நடைபெற்று வருகிறது. அதேபோல போலீசார் தங்களது ரோந்து பணியை தீவிரப்படுத்தி போைத பொருட்கள் தடுப்பது மற்றும் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இ்ந்தநிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வத்திராயிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

போதை பொருட்கள் பறிமுதல்

அப்போது தம்பிபட்டி பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தம்பிபட்டி முஸ்லிம் தெருவை சேர்ந்த மகாலிங்கம் (வயது62) என்பதும், விற்பனைக்காக 125 கிலோ போதை பொருட்கள் (போதை பாக்கு) இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மகாலிங்கத்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 125 கிலோ போதை பொருட்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ேபாதை பொருட்களின் மதிப்பு ரூ. 1,25,000 என போலீசார் கூறினர்.


Related Tags :
Next Story