ஒரே ஆண்டில் 125 பேர் குண்டர் சட்டத்தில் கைது


ஒரே ஆண்டில் 125 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரே ஆண்டில் 125 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

குண்டர் சட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை பிடிக்க மாவட்ட அளவில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தனிப்படை போலீசார் ரகசியமாக கண்காணித்து போதை பொருள் மற்றும் புகையிலை பொருட்களை கடத்தல், விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்கின்றனர்.

மேலும் தொடர்ச்சியாக போதை பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் சொத்துகளும் முடக்கப்படுகின்றன. அதேபோல் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், கொலை மற்றும் கொள்ளையில் சிக்கியர்களும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

125 பேர் கைது

அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் விற்பனை, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என மொத்தம் 125 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் கடந்த 2021-ம் ஆண்டிலும் 125 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் இதுவரை ஒருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். மேலும் தொடர் குற்றத்தில் ஈடுபடும் நபர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.


Next Story