பிளஸ்-1 இயற்பியல் தேர்வினை 12,526 பேர் எழுதினர்


பிளஸ்-1 இயற்பியல் தேர்வினை 12,526 பேர் எழுதினர்
x

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-1 இயற்பியல் தேர்வினை 12,526 பேர் எழுதினர்

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பிளஸ்-1 இயற்பியல் தேர்வு நடைபெற்றது. இதில் 5,638 மாணவர்களும், 7,296 மாணவிகளும் ஆக மொத்தம் 12,934 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 5,416 மாணவர்களும் 7,110 மாணவிகளும் ஆக மொத்தம் 12,526 பேர் எழுதினர். 222 மாணவர்களும், 186 மாணவிகளும் ஆக மொத்தம் 408 பேர் வரவில்லை, பொருளியல் பாட பிரிவில் 3,607 மாணவர்களும், 3,687 மாணவிகளும் ஆக மொத்தம் 7,294 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 3,323 மாணவர்களும், 3,508 மாணவிகளும் ஆக மொத்தம் 6,831 பேர் தேர்வு எழுதினர். 284 மாணவர்களும், 179 மாணவிகளும் ஆக மொத்தம் 463 பேர் தேர்வு எழுத வரவில்லை. கணினி பயன்பாட்டு பிரிவில் 46 மாணவர்களும், 20 மாணவிகளும் ஆக மொத்தம் 66 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 6 மாணவர்களும், 4 மாணவிகளும் ஆக மொத்தம் 10 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 40 மாணவர்களும், 16 மாணவிகளும் ஆக மொத்தம் 56 பேர் எழுத வரவில்லை, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவில் 636 மாணவர்களும், 452 மாணவிகளும் ஆக மொத்தம் 1,088 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 604 மாணவர்களும், 438 மாணவிகளும் ஆக மொத்தம் 1,042 பேர் தேர்வு எழுதினர். 32 மாணவர்களும், 14 மாணவிகளும் ஆக மொத்தம் 46 பேர் தேர்வு எழுதவரவில்லை, மேற்கண்ட தகவலை மாவட்டபள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story