காரில் கடத்திய 128 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


காரில் கடத்திய 128 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

காரில் கடத்திய 128 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் பகுதியில் நேற்று தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை சோதனை செய்தனர். அப்போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த அஜித்குமார் (வயது 25), செல்வபாண்டி (31), குமரேசன் (43), பாலதண்டாயுதம் (45) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் காரில் இருந்த 128 கிலோ புகையிலை பொருட்கள், கார், 4 செல்போன், ரூ.11,500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story