சரக்கு ரெயிலில் 1,294 டன் உரம் வந்தது
தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயிலில் 1,294 டன் உரம் வந்தது.
உரம்
தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு 1,294 டன் உரங்கள் சரக்கு ரெயில் மூலம் வந்தன. இந்த உரங்களை தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் உள்ள உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா மேற்பார்வையில் நடைபெற்றது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளுக்கு 495 டன் யூரியா, 127 டன் டி.ஏ.பி., 260 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் சரக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உரக்கடைகளுக்கு 167 டன் யூரியா, 244 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. இந்த பணியை வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அரசு நிர்ணயித்த விலை
அப்போது விற்பனை அலுவலர் ரகுவரன், மொத்த விற்பனையாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். விவசாயிகள் ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு நிர்ணயித்த விலையில் உரங்களை பெற்று பயனடைய வேண்டும் என்று வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.