12 பேரை கைது செய்து மதுபானங்கள் பறிமுதல்


12 பேரை கைது செய்து மதுபானங்கள் பறிமுதல்
x
திருப்பூர்


சுதந்திர தினத்தையொட்டி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடை, பார்களை மூட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார். ஆனால் நேற்று திருப்பூர் மாநகரில் பார்களில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடந்தது. மதுப்பிரியர்கள் பாருக்குள் சென்று மது அருந்தியபடி இருந்தனர். மது விற்பனை வெகுஜோராக நடந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் பார்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 8 பார்களில் மது விற்பனை நடந்தது தெரியவந்தது. அந்த பார்களில் சோதனை நடத்தி மது விற்ற 8 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுபோல் திருப்பூர் தெற்கு போலீசார், பார்களில் நடத்திய சோதனையில் 4 பேரை கைது செய்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மாநகரம் முழுவதும் மது விற்றவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.


Next Story