12-ந் தேதி பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12-ந் தேதி நடக்கிறது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் உள்ளிட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story