தேனி மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை 28 ஆயிரத்து 662 பேர் எழுதுகின்றனர்
தேனி மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை 28 ஆயிரத்து 662 பேர் எழுதுகின்றனர்.
தேனி மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை 28 ஆயிரத்து 662 பேர் எழுதுகின்றனர்.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (திங்ட்கிழமை) தொடங்கி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரையும், பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரையும் நடக்கிறது. தேனி மாவட்டத்தில் 142 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.
மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு தலா 53 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ்-1 பொதுத்தேர்வை பொறுத்தவரை 6 ஆயிரத்து 326 மாணவர்கள், 6 ஆயிரத்து 784 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 110 பேர் எழுதுகின்றனர். அதேபோல் பிளஸ்-2 பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 38 மாணவர்கள், 7 ஆயிரத்து 514 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 552 பேர் எழுதுகின்றனர். இந்த 2 தேர்வுகளை மொத்தம் 28 ஆயிரத்து 662 பேர் எழுதவுள்ளனர்.
பறக்கும் படை
இந்த தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் கண்காணிக்க 18 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நிலை கண்காணிப்பு குழுக்களுக்கு 170 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள்கள் எடுத்து வரவும், தேர்வு முடிந்து விடைத்தாள்களை பலத்த பாதுகாப்புடன் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு எடுத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தகவலை கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.