13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Sept 2023 11:03 PM IST (Updated: 3 Sept 2023 11:04 PM IST)
t-max-icont-min-icon

புவனகிரியில் 13 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வியாபாரிகள் 2 பேரை கைது செய்தனர்.

கடலூர்

புவனகிரி,

புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் புவனகிரியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புவனகிரி பயணியர் விடுதி அருகில் உள்ள கடைகளில் சோதனை செய்த போது, அங்கு விற்பனைக்காக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 13¼ கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக கடை வியாபாரிகளான அதை பகுதியை சேர்ந்த கோபு (வயது 43), வடலூரை சேர்ந்த சுரேஷ் (43) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story