டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கில் 13 பேர் கைது


டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கில் 13 பேர் கைது
x

மதுரையை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மேலூர்,

மதுரையை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

டிராவல்ஸ் அதிபர் கொலை

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 50). டிராவல்ஸ் அதிபர். இவருக்கு மேலூர் அருகே சாம்பிராணிபட்டியில் தென்னந்தோப்பு உள்ளது. இவரது தோப்புக்கு அருகே சாம்பிராணிபட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (46) என்பவரது தென்னந்தோப்பும் உள்ளது.

இவர்கள் இருவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்து உள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 18-ந் தேதி அன்று டிராவல்ஸ் அதிபர் சுரேஷ் மதுரையில் இருந்து காரை ஓட்டிக்கொண்டு சாம்பிராணிபட்டியில் அவரது தென்னந்தோப்புக்கு வந்துள்ளார். பின்னர் இரவு 8 மணியளவில் அவர் காரை ஓட்டிக்கொண்டு திரும்பி சென்ற போது சாம்பிராணிபட்டி மந்தை அருகே கும்பல் ஒன்று சுரேஷை வழிமறித்து ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் இறந்தார்.

13 பேர் கைது

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேலவளவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக சாம்பிராணிபட்டியை சேர்ந்த கார்மேகம் (51), அஜித்பாலன் (26), திருமலை (42), ராமு (61), பாண்டிச்செல்வி (45), அழகம்மாள் (43), ஜெயலட்சுமி (40), சுகன்யா (26),அ.வல்லாளபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (59), பரத்ராஜ் (30) காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த சிபி (21), மற்றும் 17 வயது சிறுவன், 15 வயது சிறுவன் ஆகிய 13 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story