மது விற்ற 13 பேரை கைது


மது விற்ற 13 பேரை கைது
x

கரூர் மாவட்டத்தில் மது விற்ற 13 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

கரூர்

3 பேர் கைது

தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கல்லடை பகுதியை சேர்ந்த முத்து (வயது60), ஆலத்தூர் ஊராட்சி அண்ணா நகரை சேர்ந்த குழந்தைவேல் அவரது பெட்டிகடையிலும், சேப்ளாபட்டியை சேர்ந்த மருதை (52) ஆலத்தூர் குளத்து பகுதியிலும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

நொய்யல்

புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே புதுக்கோட்டை மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்த பிச்சைக்கண்ணு (52), பெரிய ரெங்கம்பாளையத்தில் வசந்தா (53), காந்தி நகர் பகுதியில் தண்டபாணி (44), மூலிமங்கலம் பிரிவு டாஸ்மாக் கடை அருகே கிழக்குத் தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் (31) ஆகியோர் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணராயபுரம்

கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசியை சேர்ந்த சந்திரா (45), மேட்டு திருக்காம்புலியூரை சேர்ந்த பொன்னுசாமி (71) ஆகிய 2 பேரும் தங்களது வீடுகளின் பின்புறம் வைத்து மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து மாயனூர் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல் லாலாபேட்டை அருகே உள்ள வரகூர் பகுதியை சேர்ந்த சின்னபொண்ணு (48), மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (50), அன்னக்கிளி (55), தனம் (55) ஆகியோர் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் லாலாபேட்டை போலீசார் கைது செய்தனர்.


Next Story