ரவுடிக்கு ஆதரவாக செயல்பட்ட 13 பேர் கைது


ரவுடிக்கு ஆதரவாக செயல்பட்ட 13 பேர் கைது
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியேட்டர் கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் ரவுடி சஞ்சய் ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

கோவை

தியேட்டர் கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் ரவுடி சஞ்சய் ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

கட்டப்பஞ்சாயத்து விவகாரம்

கோவையில் கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் மதுரையை சேர்ந்த சத்திய பாண்டியன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி சஞ்சய் ராஜா சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரணடைந்தார்.

அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் இருந்த தப்ப முயன்ற சஞ்சய் ராஜாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

விசாரணையில், ரவுடி சஞ்சய்ராஜா ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் விவகாரத்தில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்ததும், அவருக்கு ஆதரவாக 30 பேர் செயல்பட்டதும் தெரிய வந்தது. அவர்களின் பட்டியலை போலீசார் தயார் செய்தனர்.

13 பேர் கைது

இதையடுத்து சஞ்சய்ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்ட தெலுங்கு பாளையத்தை சேர்ந்த ஜார்ஜ் (வயது 42), செல்வகுமார் (59), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஜாபர் (43), கணுவாயை சேர்ந்த உதயகுமார் (58), போத்தனூரை சேர்ந்த கேசவன் (42), வடவள்ளியை சேர்ந்த சுப்ரமணியன் (60), இடையர்பாளையத்தை சேர்ந்த வாசன் (58), செல்வபுரத்தை சேர்ந்த சூரியபிரசாத் (26), சரவணன் (44), குனியமுத்தூரை சேர்ந்த சக்திவேல் (48), சபரிராஜ் (31), காந்திபார்கை சேர்ந்த பிரகாஷ் (43), சாய்பாபா காலனியை சேர்ந்த பிரதீப் குமார் (52) உள்பட மொத்தம் 13 பேரை ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீது கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து, ஆயுத தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story