ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 13 பேர் கைது


ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 13 பேர் கைது
x

நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

தாய் தமிழ் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நெல்லை வண்ணார்பேட்டையில் புலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் தடை விதித்திருந்தனர். இதையொட்டி வண்ணார்பேட்டையில் நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர்கள் முருகன், ஹரிஹரன், ஜெயலட்சுமி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த புலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் தலைமையில் வண்ணார்பேட்டைக்கு வந்தனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார், ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 13 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.


Next Story