குடோனில் பதுக்கிய 13½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது


குடோனில் பதுக்கிய 13½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 13½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

ராமநாதபுரம் அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 13½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிரடி சோதனை

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர் செல்லும் வழியில் குடோன் ஒன்றில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜித் மேரி தலைமையில் தலைமை காவலர்கள் குமாரசாமி, முத்துகிருஷ்ணன், தேவேந்திரன் உள்ளிட்ட போலீசார் அந்த பகுதியில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அரிசி ஆலை குடோன் ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அங்கு அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர்.

13½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அந்த குடோனில் 150 மூடைகளில் தலா 40 கிலோ எடையுள்ள உடைக்கப்பட்ட ரேஷன் அரிசி 6 ஆயிரம் கிலோவும், உடைக்கப்படாத ரேஷன் அரிசி 190 மூடைகளில் தலா 40 கிலோ எடையில் 7 ஆயிரத்து 600 கிலோவும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அரிசி ஆலை வைத்து நடத்தி சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி வந்து அதனை உடைத்து விற்பனைக்கு கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கோழி தீவனங்களுக்கு அனுப்பியது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து குடோனில் இருந்த 13 ஆயிரத்து 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அங்கிருந்த கடலாடி கொண்டுநல்லான்பட்டி ஆறுமுகம் மகன் பாலமுருகன் (வயது23), வெம்பக்கோட்டை சங்கரன் மகன் மருதுபாண்டி (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த அரிசி ஆலையின் உரிமையாளரான தப்பி ஓடிய அவனியாபுரம் முனியசாமி மகன் சுப்பிரமணியன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story