மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 130 பேர் கைது
அண்ணாமலை கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோயம்புத்தூர்
காந்திபுரம்
பா.ஜனதாவில் உள்ள பெண் நிர்வாகிகளை தி.மு.க. நிர்வாகி தரக்குறைவாக பேசியதை கண்டித்து சென்னையில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அண்ணாமலை உள்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து கோவையில் பா.ஜனதா மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தலைமையில் பா.ஜனதா நிர்வாகிகள் கோவை காந்திபுரம் டவுன் பஸ்நிலையம் முன்பு குவிந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாவட்ட தலைவர், மாநில துணைத்தலைவர் கனகசபாபதி உள்பட பா.ஜ.க.வினர் 130 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story