பொள்ளாச்சி தாலுகாவில் ஜமாபந்தி முகாமில் 130 மனுக்களுக்கு தீர்வு- அதிகாரிகள் தகவல்


பொள்ளாச்சி தாலுகாவில்  ஜமாபந்தி முகாமில் 130 மனுக்களுக்கு தீர்வு- அதிகாரிகள் தகவல்
x

பொள்ளாச்சி தாலுகாவில் நடந்த ஜமாபந்தி முகாமில் 130 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி தாலுகாவில் நடந்த ஜமாபந்தி முகாமில் 130 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரி

பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் கடந்த 26-ந் தேதி ஜமாபந்தி தொடங்கியது. கோலார்பட்டி உள்வட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. சப்-கலெக்டரும், ஜமாபந்தி அதிகாரியுமான சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது கோலார்பட்டியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரி மூலம் 20-க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாததால் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதலாக டாக்டர், செவிலியரை நியமிக்க வேண்டும். கோலார்பட்டி ஊராட்சி மற்றும் அதை சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சீரான குடிநீர் வினியோகம் செய்வதில்லை. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

130 மனுக்களுக்கு தீர்வு

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோலார்பட்டி உள்வட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தியில் பட்டா மாறுதல், நத்தம் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட 121 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 31 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 90 மனுக்கள் நிலுவையில் உள்ளது. ஜமாபந்தியில் சப்-கலெக்டர் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை பயனாளிகளிடம் வழங்கினார்.மேலும் பொள்ளாச்சி தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் மொத்தம் 480 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 130 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 319 மனுக்கள் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள மனுக்கள் மீது தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story