133 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது


133 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது
x

வேலூர் மாவட்டத்தில் 133 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண் எந்திரங்கள்

தமிழ்நாட்டில் நிலவும் வேளாண்மை தொழிலாளர் பற்றாக்குறையை போக்கவும், குறித்த நேரத்தில் குறைந்த செலவில் வேளாண் பணிகளை தொடங்கவும், பயிர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், அறுவடை பணிகளை மேற்கொள்ளவும், தமிழ்நாடு அரசு வேளாண் எந்திரமயமாக்கல் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திவருகிறது.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நவீன வேளாண் எந்திரங்களான டிராக்டர், பவர் டில்லர், நாற்று நடும் எந்திரம், களையெடுக்கும் எந்திரம், அறுவடை எந்திரம் உள்ளிட்ட எந்திரங்களும், கல்டிவேட்டர், ரோட்டவேட்டர், வைக்கோல் கட்டும் எந்திரம் உள்ளிட்ட இணைப்பு கருவிகளும் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

133 பேருக்கு

அதன்படி வேலூர் மாவட்டத்தில் 2023-2024-ம் ஆண்டில் ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பிலான 60 வேளாண் எந்திரங்கள் ரூ.84 லட்சத்து 55 ஆயிரம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி நடப்பாண்டில் இதுவரை வேலூர் மாவட்டதில் 133 விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 63 லட்சம் மதிப்பிலான வேளாண் எந்திரங்கள் ரூ.1 கோடியே 40 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story