ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.34 கோடி வசூல்


ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.34 கோடி வசூல்
x

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.34 கோடி வசூல் ஆனது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு 22 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது.

இந்த பணிகளில் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். நிரந்தர உண்டியல்களில் மூலமாக மொத்தம் ரூ.1 கோடியே 34 லட்சத்து 30 ஆயிரத்து 706 கிடைத்தது. மேலும் 786 கிராம் தங்கம், 2 கிலோ 20 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் கோவில் உதவி ஆணையர் விஜயலட்சுமி, தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாச மூர்த்தி, கோவில் கண்காணிப்பாளர் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story