குமரியில்அதிக பாரம் ஏற்றிய 2 வாகனங்களுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம்கலெக்டர் ஸ்ரீதர் தகவல்


குமரியில்அதிக பாரம் ஏற்றிய 2 வாகனங்களுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம்கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
x
தினத்தந்தி 5 May 2023 7:15 PM GMT (Updated: 5 May 2023 7:15 PM GMT)

குமரியில்அதிக பாரம் ஏற்றிய 2 வாகனங்களுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,:

குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் வாகனங்களில் அளவுக்கு அதிகமாகவோ, அனுமதி இல்லாமலோ கனிம வளங்கள் கொண்டு வருவதை கண்காணிக்க ஆரல்வாய்மொழி, களியக்காவிளை, படந்தாலுமூடு, அஞ்சுகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் 20 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடிகளில் வாகனங்களை சோதனை செய்வதற்கு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் மேற்படி குழுவினர் சோதனை மேற்கொண்டதில் அதிக பாரம் ஏற்றிய 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. 9 வாகனங்களுக்கு ரூ.5.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. களியக்காவிளை சோதனை சாவடி பகுதியில் பறிமுதல் செய்த ஒரு வாகனத்திற்கு ரூ.62 ஆயிரம் அபராதமும், முளகுமூடு பகுதியில் பறிமுதல் செய்த ஒரு வாகனத்திற்கு ரூ.74 ஆயிரம் என 2 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 வாகன டிரைவர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு ஓடிவிட்டதால், அவர்கள் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த 3 வாகன டிரைவர்களின் உரிமங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story