1,381 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


1,381 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x

1,381 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசியில் அசோக்குமார் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இந்த புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. விருதுநகர், சிவகாசி, சாத்தூர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 7 மையங்களில 215 பெண்கள் உள்பட 1,381 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.


Next Story