நெல்லையப்பர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.13.82 லட்சம்


நெல்லையப்பர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.13.82 லட்சம்
x

நெல்லையப்பர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.13.82 லட்சம் கிடைத்தது.

திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.13.82 லட்சம் கிடைத்தது.

உண்டியல்கள் திறப்பு

நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் வருகிற 24-ந் தேதி ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து தினமும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும், 2-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லையப்பர் கோவில் நிரந்தர உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டது.

இதற்காக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரியாக நாகர்கோவில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் தங்கம், நெல்லை மேற்கு பிரிவு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தனலெட்சுமி என்ற வள்ளி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது.

ரூ.13.82 லட்சம் காணிக்கை

பின்னர் அதில் சேகரிக்கப்பட்ட பணம் அம்பாள் சன்னதி வளாகத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, பணியாளர்கள் கலந்து கொண்டனர். சேலத்தை சேர்ந்த ஸ்ரீ ஜெய் நந்தகம் அறக்கட்டளையினர் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ரூ.13 லட்சத்து 82 ஆயிரத்து 202 ரொக்க பணமும், 24 கிராம் மாற்று பொன் இனங்களும், 90 கிராம் பலமாற்று வெள்ளி இனங்களும் இருந்தது. மேலும் 19 வெளிநாட்டு பணமும் கிடைத்தது.


Next Story