13-ம் நூற்றாண்டு நந்தி சிலை கண்டெடுப்பு


13-ம் நூற்றாண்டு நந்தி சிலை கண்டெடுப்பு
x
தினத்தந்தி 20 Sep 2022 6:45 PM GMT (Updated: 20 Sep 2022 6:46 PM GMT)

13-ம் நூற்றாண்டு நந்தி சிலை கண்டெடுப்பு

ராமநாதபுரம்

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் பாரதி நகர் கடற்கரை பகுதியில் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருமலை சேதுபதி மன்னர் ஆட்சி காலத்தில் (கி.பி. 1664-1674) கீழக்கரையில் உள்ள தொன்மையான மீனாட்சி கந்தேஸ்வரர் கோவிலில் பூஜைக்கு தேவதானமாக நிலம் கொடுத்துள்ளார். கொடுத்த இடத்திற்கு எல்லைகள் குறித்து அதே கோவிலில் கல்வெட்டும் வைத்துள்ளார். கீழக்கரை கடற்கரை பகுதியில் அதிக காற்று, சுனாமி போன்ற சீற்றத்தால் மணல்மேடுகள் ஏற்பட்டு கோவில் மணலுக்குள் புதைந்து இருக்கலாம். இந்த சிலையின் நீளம் 150 சென்டி மீட்டர், அகலம் 33 சென்டி மீட்டர், உயரம் 49 சென்டிமீட்டர் உள்ளது. இந்த நந்தி சிலை 13-ம் நூற்றாண்டு சேர்ந்தது என கூறப்படுகிறது. நந்தியின் பின் தொடை பகுதியில் அபூர்வமாக ஓம் பசுபதி-பசுவதி என்ற வாசகம் உள்ளது. பசுபதி என்பது ஆன்மாக்களுக்கு தலைவனாகிய சிவபெருமானை குறிக்கும். சிவபெருமான் விலங்கு உருவத்தில் இருந்தாராம். விலங்குகளின் கடவுள் அதாவது பசுபதிநாதர் என அழைக்கப்பட்டார். ஒரு காலத்தில் மாயா என்பவர் இப்பகுதியில் குளம் அமைத்து சிவனை நோக்கி தவம் இருந்ததால் இந்த ஊருக்கு மாயாகுளம் என்று பெயரிடப்பட்டது. மாயா என்பவர் புத்தரின் தாயார் புத்தர் பிறந்த வம்ச அரசர்கள்தான் காத் மாண்டுவில் உள்ள பசுபதிநாதர் கோவிலை கட்டியுள்ளனர். எனவே காலை வடிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து மாயா தேவி வழிபட்டு இருக்கலாம்.


Next Story