14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது
விராலிமலை அருகே 14 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை
புகையிலை பொருட்கள்
விராலிமலை தாலுகா மேப்பூதகுடி குளவாய்பட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலாமணி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இனாம்குளத்தூர் - மேப்பூதகுடி பிரிவு சாலை அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 42) என்பவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
14 கிலோ பறிமுதல்
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 14 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த மணப்பாறையை சேர்ந்த ரவி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story