வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.14 லட்சம்முறைகேடு


வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.14 லட்சம்முறைகேடு
x
தினத்தந்தி 31 July 2023 10:01 PM IST (Updated: 1 Aug 2023 2:34 PM IST)
t-max-icont-min-icon

வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.14 லட்சம்முறைகேடு செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.வல்லகுண்டாபுரம் பகுதியை சேர்ந்த ெபாதுமக்கள் கலெக்டரிடம் மனு

திருப்பூர்

திருப்பூர்

கொண்டம்பட்டி ஊராட்சியில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.14 லட்சம்முறைகேடு செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.வல்லகுண்டாபுரம் பகுதியை சேர்ந்த ெபாதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

வேலை உறுதியளிப்பு திட்டம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் உடுமலை எஸ்.வல்லகுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொண்டம்பட்டி ஊராட்சி எஸ்.வல்லகுண்டாபுரத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலைக்கு வராத நபர்களின் பெயரில் போலியாக வருகை பதிவு செய்து ஊழல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து மாவட்ட குறைதீர்ப்பாளருக்கு புகார் தெரிவிக்கப்பட்டு கடந்த மாதம் 3-ந் தேதி ஊராட்சி அலுவலகத்தில் முதல்கட்ட விசாரணை நடைபெற்றது.

பின்னர் 2-வது கட்ட விசாரணை நடத்தியதில் ரூ.14 லட்சத்து 7 ஆயிரத்து 68 முறைகேடு நடைபெற்றது உண்மை என தெரியவந்தது. இந்த முறைகேட்டில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், திட்ட ஒருங்கிணைப்பாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊரக வேலை உறுதி திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி ஆகியோர் மீது சட்டப்படி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை

மேலும் ரூ.14 லட்சத்து 7 ஆயிரத்து 68-ஐ திரும்ப அரசு கணக்குக்கு வரவு செய்ய மாவட்ட குறைதீர்ப்பாளர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

-


Next Story