விராலிமலை முருகன் கோவிலில் ரூ.14¼ லட்சம் உண்டியல் காணிக்கை


விராலிமலை முருகன் கோவிலில் ரூ.14¼ லட்சம் உண்டியல் காணிக்கை
x

விராலிமலை முருகன் கோவிலில் ரூ.14¼ லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது.

புதுக்கோட்டை

விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் ஆறு முகங்களுடன் வள்ளி-தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் உள்ள உண்டியல்களை எண்ணும் பணி தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா தலைமையிலும், குளத்தூர் ஆய்வாளர் யசோதா, புதுக்கோட்டை தேவஸ்தான செயல் அலுவலர் முத்துராமன் ஆகியோர் முன்னிலையிலும் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.14 லட்சத்து 41 ஆயிரத்து 371 வசூல் ஆகியிருந்தது. மேலும், 25 கிராம் தங்கம், 1 கிலோ 415 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து, கோவில் பணியாளர்கள், விராலிமலையில் உள்ள தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story