கரூரில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த 14 பேர் கைது
கரூரில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 14 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 90 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிரடி சோதனை
கரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.அதன்படி மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
14 பேர் கைது
இதில், மண்மங்கலம் பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 47), புன்னம் சத்திரத்தை சேர்ந்த திலகவதி (49), ராஜாகண்ணு (69), வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த குழந்தைநாதன் (59), மண்மங்கலத்தை சேர்ந்த மழையாத்தாள் (47), வெள்ளியணையை சேர்ந்த வெள்ளையதேவன் (61), முருகேசன் (73), சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த குமார் (21), மண்மங்கலத்தை சேர்ந்த லோகநாதன் (51), ராயனூரை சேர்ந்த சடையன் (54), சின்னதாராபுரத்தை சேர்ந்த மகேஸ்வரி (51), திருவாடுதுறையை சேர்ந்த ஜீவா (35), கருப்பாயிகோயில் தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (57), மண்மங்கலத்தை சேர்ந்த மலர்விழி (45) ஆகிய 14 பேரை போலீஸ்சார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து மொத்தம் 90 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.