தொழிலாளி வீட்டில் 14 பவுன் நகைகள் கொள்ளை


தொழிலாளி வீட்டில் 14 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-31T00:16:53+05:30)

கோத்தகிரியில் தொழிலாளி வீட்டில் 14 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், உறவினர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் தொழிலாளி வீட்டில் 14 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், உறவினர் கைது செய்யப்பட்டார்.

இந்த கொள்ளை குறித்து போலீசார் கூறியதாவது:-

14 பவுன் நகைகள் மாயம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள மிஷன் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 46). தொழிலாளி. இவரது உறவினர், கேத்தி அருகே உள்ள மேல் ஒடையரட்டி பகுதியை சேர்ந்த சஞ்சீவி(26). இவர், மணிகண்டனின் வீட்டில் தங்கியிருந்து, அந்த பகுதியில் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி கீழ் கோத்தகிரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் சென்றார். பின்னர் 27-ந் தேதி தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 14 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது.

சிறையில் அடைப்பு

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் நகைகளை கொள்ளையடித்துச்சென்றது சஞ்சீவி என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர். தொடர்ந்து சஞ்சீவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story