ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 14 பவுன் நகை திருட்டு
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 14 பவுன் நகை திருட்டு நடந்தது
குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அன்னஸ்ரீமதி (வயது 60). இவர் கடந்த 8-ந் தேதி பொள்ளாச்சியில் உள்ள உறவினர் ஒருவரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் சென்றார்.
பின்னர் அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் உறவினர்களுடன் தனியார் பஸ்சில் உக்கடம் வந்தனர்.
அதன்பிறகு அவர்கள் கோவை ரெயில் நிலையத்திற்கு வந்தனர். பஸ் நிறுத்தத்தில் இறங்கியதும், அன்னஸ்ரீமதி தனது கைப்பையை பார்த்தார். அப்போது அதில் வைத்திருந்த 14 பவுன் தங்க சங்கிலி, வளையல் உள்ளிட்ட நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து 14 பவுன் தங்க நகைகளை திருடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கோவை பூமார்க்கெட், டவுன்ஹால், உக்கடம் வழித்தடங்களில் ஓடும் பஸ்சில் வயதான பெண்களை குறி வைத்து நகை திருடுவது அதிகரித்து வருகிறது.
எனவே நகைப்பறிப்பு ஆசாமிகளை போலீசார் கண்டறிந்து கைது செய்ய வேண்டும், என்றனர்.