தமிழகத்தில் 145 பேருக்கு பாதிப்பு; சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் 123 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் 145 பேருக்கு பாதிப்பு; சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் 123 பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் நேற்று 145 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் மட்டும் 123 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் புதிதாக 14 ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 88 பேரும், பெண்கள் 57 பேரும் என 145 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 58 பேர், செங்கல்பட்டில் 53 பேர், திருவள்ளூரில் 12 பேர் என 123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 27 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

12 வயதுக்கு உட்பட்ட 8 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 18 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 16 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகியுள்ளது. இந்த மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்றும் இல்லை, சிகிச்சையிலும் யாரும் இல்லை.

711 பேர் சிகிச்சை

தமிழகத்தில் 77-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 711 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 326 பேரும், செங்கல்பட்டில் 261 பேரும் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் 42 பேர் மட்டுமே ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

63 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 17 ஆயிரத்து 22 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story