1,480 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


1,480 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

1,480 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் 253 வழக்குகள் பதிவு செய்து, 1,480 டன் ரேஷன் அரிசி மற்றும் 65 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில், கோவை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் திருப்பூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநில எல்லை பகுதிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருவதால் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பவங்கள் குறைந்துள்ளன.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களை கைது செய்துள்ளனர். வெளிமாநிலங்களுக்கு செல்லும் வழித்தடங்கள், ஆளில்லாத போலீஸ் வாகன சோதனை சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தடுக்கப்படுகிறது.

1,480 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடுமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 253 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 253 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 1,480 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்திய 65 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ச்சியாக ஈடுபட்ட 4 பேர் மீது கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டமான குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பழைய குற்றவாளிகளை கண்காணித்து வருகிறார்கள். தொடர்ந்து வாகன சோதனையும் நடக்கிறது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

-----------------


Next Story