முசிறி அருகே வேன் கவிழ்ந்து விபத்து - 15 பேர் காயம்


முசிறி அருகே வேன் கவிழ்ந்து விபத்து - 15 பேர் காயம்
x

முசிறி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

திருச்சி


திருச்சி அருகே கீழ பச்சனம்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் மனைவி கவுசல்யா(வயது39) இவர் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரோடு சேர்ந்து 20 பேர் இந்த நிறுவனத்துக்கு வேனில் வேலைக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் 20 பேரை ஏற்றிக் கொண்டு கரூர் நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேன் முசிறி-சேலம் பழைய மெயின் ரோட்டின் மலையப்பபுரம் அருகே வரும் போது முன்னால் சென்ற சுற்றுலா வேனை முந்தி செல்ல முயன்ற போது நிலை தடுமாறி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 15 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் விரைந்து வந்த காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story