வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் நகை திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் நகை திருட்டு
x

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் நகை திருட்டு

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

பூட்டிய வீடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் நந்தகுமார் (வயது 31).பஸ் கம்பெனி அதிபர். இவர் தனது மனைவி சங்கமித்ராவுடன் கோவை கோவில்பாளையம் கிரவுண்ட் சிட்டி குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றார்.

சங்கமித்ராவின் தாயார் மலர்விழி சங்கமித்ரா வீட்டுக்கு அருகிலேயே தனியாக வசித்து வருகிறார். சங்கமித்ராவுக்கு குழந்தை உள்ளது. இந்த குழந்தையை பார்ப்பதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மலர்விழி வீட்டை பூட்டி விட்டு சங்கமித்ரா வீட்டிற்கு வந்துள்ளார்.

ரூ.15 லட்சம் நகைகள்

நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு திரும்ப வந்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 38 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

போலீஸ் வலை வீச்சு

இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story