கோவிலுக்கு சொந்தமான ரூ.15 லட்சம் நிலம் மீட்பு


கோவிலுக்கு சொந்தமான ரூ.15 லட்சம் நிலம் மீட்பு
x

கோவிலுக்கு சொந்தமான ரூ.15 லட்சம் நிலம் மீட்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை அருகே உள்ள புதுக்குறிச்சி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 98 சென்ட் நிலத்தை, ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் லட்சுமணனுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் ஆலத்தூர் ஆய்வாளர் தமிழரசி, காரை மேற்கு கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் புதுக்குறிச்சி கிராம மக்கள் ஒத்துழைப்புடன் ரூ.15 லட்சம் மதிப்பிலான மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

1 More update

Next Story