நகைக்கடை அதிபரிடம் ரூ.15 லட்சம்,1,900 கிராம் தங்கம் மோசடி


நகைக்கடை அதிபரிடம் ரூ.15 லட்சம்,1,900 கிராம் தங்கம் மோசடி
x
தினத்தந்தி 1 Aug 2023 12:30 AM IST (Updated: 1 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நகைக்கடை அதிபரிடம் ரூ.15 லட்சம், 1,900 கிராம் தங்கம் மோசடி செய்த தங்கநகை ஏலச்சீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்


கோவையில் நகைக்கடை அதிபரிடம் ரூ.15 லட்சம், 1,900 கிராம் தங்கம் மோசடி செய்த தங்கநகை ஏலச்சீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.


நகைக்கடை அதிபர்


கோவை செல்வபுரம் திருநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் சிவக் குமார் (வயது 50). நகைக்கடை அதிபர். இவர் பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-


நான் கோவை செல்வபுரம் அசோக் நகரில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நகைக்கடை நடத்தி வருகிறேன். நானும், வைசியாள் வீதியில் தங்க நகை ஏலச்சீட்டு நடத்தி வரும் மகேஷ்பாபு (55) என்பவரும் 30 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தோம்.


அவரது மகளுக்கு 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது மகேஷ்பாபு என்னிடம் ரூ.15 லட்சம் கடன் வாங்கினார். ரூ.100-க்கு 1 ரூபாய் வட்டி செலுத்தி வந்தார். இதையடுத்து அவர், என்னிடம், தங்க நகை ஏல சீட்டில் சேர்ந்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினார்.


ரூ.1.30 கோடி மோசடி


அதை நம்பி நான் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2021-ம் ஆண்டு வரை அவரது ஏல சீட்டு கம்பெனியில் தங்கம் கொடுத்து வந்தேன். மாதந்தோறும் 80 கிராம், 85 கிராம் வீதம் 1,756 கிராம் சொக்க தங்கத்தை கொடுத்தேன். அதற்கு லாபத்து டன் 1,900 கிராம் தங்கம் தருவதாக மகேஷ்பாபு உறுதியளித்தார்.


ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர் கடனாக பெற்ற ரூ.15 லட்சம், 1,900 கிராம் தங்கம் ஆகியவை சேர்த்து ரூ.1.30 கோடியை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். பலமுறை கேட்டும் தர வில்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணம் மற்றும் தங்கத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


ஏலச்சீட்டு உரிமையாளர் கைது


இது குறித்து பெரிய கடைவீதி போலீசார் நடத்திய விசாரணையில், மகேஷ்பாபு தங்கம் மற்றும் பணத்தை சிவக்குமாரிடம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.அதைத்தொடர்ந்து நம்பிக் கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவு களின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கநகை ஏலச்சீட்டு உரிமையாளர் மகேஷ்பாபுவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.



Next Story