செஞ்சியில் வெறிநாய் கடித்ததில் 15 பேர் காயம்


செஞ்சியில் வெறிநாய் கடித்ததில் 15 பேர் காயம்
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சியில் வெறிநாய் கடித்ததில் 15 பேர் காயமடைந்தனா்.

விழுப்புரம்

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார், சந்தை மேடு, களவாய் கூட்டு ரோடு ஆகிய பகுதிகளில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. இந்த வெறிநாய் சாலையில் செல்பவர்களை துரத்தி, துரத்தி வந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள், முதியோர் உள்ளிட்ட பொதுமக்களை அந்த வெறிநாய் கடித்தது.

இதில் அதேபகுதியை சேர்ந்த ஆதிலட்சுமி(வயது 50), சக்திவேல்(35), சாதனா(14), மகாதேவன்(65), ஆகாஷ்(22), நவீன்குமார்(21), அருள்(55), சின்ன பாப்பா(52), செந்தாமரை(60), குப்பன்(65) உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெறிநாய் கடித்ததில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செஞ்சி நகரில் சுற்றித்திரியும் நாய்கள், சாலையில் செல்பவா்களை துரத்துவதால், நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story