அரசு பஸ்-டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதல்; 15 பேர் காயம்


அரசு பஸ்-டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதல்; 15 பேர் காயம்
x

எருமப்பட்டி அருகே அரசு பஸ்சும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.

நாமக்கல்

எருமப்பட்டி

நேருக்கு நேர் மோதியது

எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி ஊராட்சி அருகே நாமக்கல்லில் இருந்து முட்டாஞ்செட்டி வழியாக துறையூர் அரசு பஸ் ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில் அந்த பஸ்சும் வரகூரிலிருந்து எருமப்பட்டியை நோக்கி வந்த டிப்பர் லாரியும் முட்டாஞ்செட்டி முஸ்லிம் சுடுகாடு அருகே எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் பஸ்சில் பயணம் செய்த பிரியா (வயது 38), தங்கராஜன் (55), சந்திரா (61), தினேஷ்குமார் (18), சுதா (43), பிரீத்தி (23), ராஜம்மாள் (55), சரோஜா (60) செண்பகம் (37), ரேவதி (35), கவிதா (40) உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதை பார்த்த அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணை

அரசு பஸ் மீது மோதிவிட்டு டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் அறிந்த எருமப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை சென்று வருகிறார்கள். எருமப்பட்டி அருகே அரசு பஸ்-டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story