விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட 15 திட்டங்களை செயல்படுத்த வேண்டும்
கோவை சர்வதேச அளவில் தொழில்துறையில் முன்னேற 15 திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று இந்திய தொழில் வர்த்தக சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை சர்வதேச அளவில் தொழில்துறையில் முன்னேற 15 திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று இந்திய தொழில் வர்த்தக சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை தலைவர் பி.ஸ்ரீராமுலு கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோரிக்கைகள்
கோவையின் வளர்ச்சிக்கு குரல் கொடுக்கும் முதன்மையான அமைப்பாக இந்திய தொழில் வர்த்தக சபை செயல்பட்டு வருகிறது.
கோவை பகுதி இன்னும் சிறப்பாக வளர தொழில்முனைவோர்கள் பலநாட்டிலிருந்து கோவைக்கு வந்து முதலீடு செய்ய, கோவை பகுதி தொழில் செய்வோருக்கும் வியாபாரம் செய்வோருக்கும் மிகச்சிறந்த சிறப்பிடம் ஆக இருக்க வேண்டும்.
அந்தத் தகுதியை வளர்க்க இந்திய தொழில் வர்த்தக சபை சில கோரிக்கைகளை அரசுக்கு வைத்து அதை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.
15 திட்டப் பணிகள்
1.கோவை மெட்ரோ ரெயில் திட்டம், 2. கோவை - கரூர் பசுமைசாலை, வடக்கு ரிங் ரோடு.3- கோவை விமான நிலைய விரிவாக்கம். 4.. கோவை - சத்தியமங்கலம் 4 வழிச்சாலை, 5- அவினாசி சாலை மேம்பால பணிகளை விரைந்து முடித்தல்.6- அத்திக்கடவு - அவினாசி திட்டம், 7- மேற்கு புறவழிச்சாலை,
8 - பில்லூர் 3-வது திட்டம்.10 - சூலூர் பாதுகாப்பு துறை உற்பத்தி பூங்கா, 11 - நடந்து வரும் மேம்பாலம் பணிகளை முடித்தல். 12 - எல் ஆண்டு டி பைபாஸ் ரோடு விரிவாக்கம், 13 - மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க்,
14 - கோவை ரெயில்நிலைய சீரமைப்பு, ஒருங்கிணைந்த பஸ் நிலையம்,இதுபோன்ற திட்டங்கள் பல இருக்கிறது. இவை அரசின் கவனத்திலும் இருக்கிறது. ஆனால் பல காரணங்களால் விரைவாக செயல்பட இயலாமல் இருக்கிறது. இதனால் இந்தப் பகுதியின் வளர்ச்சி தடைப்படுவதுடன், வெளிநாட்டில் உள்ளவர்களும் மற்ற மாநிலத்தில் உள்ளவர்களும் இந்தப் பகுதிக்கு வந்து தொழில் தொடங்க தயக்கம் காட்டுகின்றனர்.
விரைவாக செயல்படுத்த வேண்டும்
இந்தத் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டால் கோவை பகுதி இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் மிகச்சிறந்த தொழில் நகரமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
இந்திய தொழில் வர்த்தக சபை, அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதுடன் அரசுடன் சேர்ந்து செயல்பட்டு இந்தப் பகுதியை சிறந்த கட்டமைப்பு கொண்ட, வசதிகள் கொண்ட அனைத்து தரமான வளர்ச்சிக்கான கட்டுமான பணிகளும் நிறைவேற்றி சிறந்த பகுதியாக செயல்பட உறுதி அளிக்கிறது.
கோவை பகுதி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் ஏன் உலகத்தின் மிகச்சிறந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் பகுதியாக மாற்ற வேண்டும் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று அரசை வேண்டிக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.