ரூ.15 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
தேவூரில் ரூ.15 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்
சிக்கல்:
நாகை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் மாவட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு ஆலோசகர் டாக்டர் பிரதாப், வட்டார மருத்துவ அலுவலர் மாரிமுத்து மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று மாலை தேவூர் கடைத்தெருவில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை செய்தனர். இதில் தேவூரில் உள்ள 15 கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 7 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story