நாகர்கோவிலில் 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - போக்குவரத்து போலீசார் நடவடிக்கை


நாகர்கோவிலில் 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
x

நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் நிறுத்தியிருந்த 15 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி


நாகர்கோவில் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகராட்சி அதிகாரிகளும், போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சாலையோரத்தில் தடை செய்யப்பட்ட இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று மொத்தம் 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் அனைத்தும் மீட்பு வாகனத்தில் ஏற்றப்பட்டு கணேசபுரத்தில் உள்ள போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

1 More update

Next Story