திருவிழாவிற்காக 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் சீரமைப்பு


திருவிழாவிற்காக 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் சீரமைப்பு
x

திருவிழாவிற்காக 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் சீரமைக்கப்பட்டது.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஆயிர வள்ளி அம்மன், அய்யனார், மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவில்களின் தேர் திருவிழா கடந்த 2008-ம் ஆண்டுக்கு பின்னர் 14 ஆண்டுகள் கழித்து ஜூலை மாதம் 13-ந் தேதி நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டத்தின்போது குன்னம் கிராமத்தில் முக்கிய தெருக்களில் பக்தர்களால் தேர் வடம்பிடித்து இழுத்து வரப்படும். இத்திருவிழாவை முன்னிட்டு 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேரின் சீரமைப்பு பணி தொடங்கி நடைபெற்றது. சீரமைப்பு பணிக்கு முன்பு கிராம மக்கள் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story