நாகர்கோவிலில் மதுபோதையில் பஸ்சை வழிமறித்த வாலிபருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்


நாகர்கோவிலில் மதுபோதையில் பஸ்சை வழிமறித்த வாலிபருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
x

நாகர்கோவிலில் மதுபோதையில் பஸ்சை வழிமறித்த வாலிபருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் மதுபோதையில் பஸ்சை வழிமறித்த வாலிபருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பஸ்சை வழிமறித்த வாலிபர்

நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவர் திடீரென ஒரு பஸ்சின் குறுக்கே சாலையை மறித்து மோட்டார் சைக்கிளுடன் நின்றார். மேலும் அவர் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் செட்டிகுளம் முதல் சவேரியார் ஆலய சந்திப்பு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரூ.15 ஆயிரம் அபராதம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் செட்டிகுளம் பகுதிக்கு விரைந்தனர். நடு ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

இதில் அவர் சரக்கல்விளை பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் என்பதும், மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. பொதுமக்களுக்கு இடையூறாக பஸ் டிரைவர் ஏர்ஹாரன் அடித்துக்கொண்டே இருந்ததால் பஸ்சை தடுத்து நிறுத்தியதாகவும் கூறினார்.

பின்னர் அந்த வாலிபர் மது போதையில் வாகனம் ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், ஓட்டுனர் உரிமம் இல்லாததற்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதத்தை போலீசார் விதித்தனர்.


Next Story